‘பாராசிட்டமால்’ மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள் ?
இந்தியாவில் காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பாராசிட்டமால் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் குறித்த தரவுகள் ஆராயப்பட்டது.
பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்ற முடிவை இந்த ஆய்வு முன்வைக்கிறது.
அதன்படி, வயதானவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்தினால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.