ஹாலி – எல பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
ஹாலி-எல பகுதியில் ஆறு ஒன்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (22) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதேனிகம, ஹாலி-எல பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாயான ஆர்.டி.தம்மிக்க லதா (42) என்பவரின் சடலம் என உயிரிழந்தவரின் கணவர் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பலவகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 18ஆம் திகதி காலை முதல் அவர் வீட்டில் இருந்து காணவில்லை எனவும் அவரது கணவர் கந்தேகெதர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலி-எல பகுதியில் ஆறு ஒன்றில் பெண்ணின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka