இலஞ்சம் பெற்ற வர்த்தகர்கள் இருவர் கைது
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 09 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வர்த்தகர்கள் இருவர் புறக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர்களான வர்த்தகர்கள் இருவரும் தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கையகப்படுத்தப்பட்ட குறித்த வர்த்தகரின் உறவினரின் காணிக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து குறித்த வர்த்தகரிடம் இருந்து இவ்வாறு இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது