சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் வானில் தோன்றிய மர்மப் பொருட்கள் மீண்டும் இலங்கையில்
வவுனியாவின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (18) உணரப்பட்ட திடீர் நில அதிர்வையடுத்து முல்லைத்தீவு வான் பரப்பில் 2 மர்மப் பொருட்கள் காணப்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீல நிறத்தில் இருக்கும் இந்த 2 மர்மப் பொருட்களும் வானத்தில் மெதுவாக மிதந்து வந்ததாகவும், அவை நில அதிர்வையடுத்து வானில் காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வானத்தில் மெதுவாக மிதந்த அந்த 2 பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்பட்டதாகவும், அந்த 2 மர்மப் பொருட்களும் நிலப்பகுதிகளை விட கடலில் நன்றாகத் தெரிந்ததாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுனாமி ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற பல பொருட்கள் வானில் மிதந்ததாகவும் அவை சுனாமியின் பின்னர் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் பிரிவிற்கும் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், அதற்கான விபரங்களை கொழும்பில் சமர்ப்பித்துள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.