இலங்கையில் 5,000 பேருக்கு எலிக்காய்ச்சல்

இலங்கையில் 5,000 பேருக்கு எலிக்காய்ச்சல்

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா முக்கியமாக எலிகளின் சிறுநீரில் உள்ளதால், கால்நடைகள், நாய்கள் மற்றும் பன்றிகளின் மலம் மற்றும் சிறுநீரில் இது இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கான பாக்டீரியாக்கள் நீரில் கலந்த பிறகு, அது மனிதனின் கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் வழியாக மனித உடலில் நுழைகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் துஷானி தாபரே, “ஒரு ஆண்டில்  எலிக்காய்ச்சலால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருவகின்றது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “பல சமயங்களில் சிகிச்சை பெறாதவர்கள் உயிரிழப்பதாகவும் கூறிய டொக்டர், எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

கால்களில் வெட்டுக்காயங்கள் அல்லது வேறு காயங்கள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் மேலும் அசுத்தமான நீரில் முகம், வாய் அல்லது மூக்கைக் கழுவுவதன் மூலமும் பாக்டீரியாவை பரவலாம் என்று மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )