மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று!

மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்தக போட்டியில் இந்திய மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில்
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி இருத்தி போட்டிக்கு தகுதி பெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஆசிய கிண்ண
இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )