இதுவரை 79,000 மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி
நேற்று (31) நண்பகல் 12 மணி நிலவரப்படி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 79,000 என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 டொன் கச்சா அரிசியும் 48,000 டொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
மேலும், இந்த கையிருப்பில் 780 டொன்கள் அரச வணிக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
CATEGORIES Sri Lanka