காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும்

காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும்

பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில் காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி, “ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் இராணுவம் கட்டுப்படுத்துகிறது.

ஹமாசின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாவில் சண்டை குறைந்தது இந்த ஆண்டு முழுவதும் தொடரும்.

பலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் கோரியபடி போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை.

காசாவின் ரபா நகரில் சண்டையிடுவது அர்த்தமற்ற போர் அல்ல. காசாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அதையும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்துவதே நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )