மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி
வல்லைப் பகுதியில் இன்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான, 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் .
இவர், யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் புதல்வனும் ஆவார்.
யாழ். நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞன், வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka