பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல்
தைப் பொங்கல் கொண்டாட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.
பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா கொண்டாடப்பட்டது. இங்கு பிரதமர் அலுவலக அதிகாரிகளால் பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.