காசாவில் இன்று முதல் போர் நிறுத்தம்
காசா எல்லையில் இன்று காலை 8.30 முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் பணயக்கைதிகள் மற்றும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான பரிமாற்றம் இடம்பெறுமென கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்தன. இது 3 கட்டங்களாக செயற்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த காலப்பகுதியில் ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன், இவர்களில் பெண்கள், குழந்தைகள், இராணுவ வீரர்களும் அடங்குகின்றனர்.
இதனிடையே இஸ்ரேலில் இருந்து 737 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பட்டியலும் தயாராகியுள்ளது.
இருதரப்பிலிருந்தும் இன்று மாலை 4 மணி அளவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.