பிரபல சிங்கள பாடகர் அனில் பாரதி காலமானார்

பிரபல சிங்கள பாடகர் அனில் பாரதி காலமானார்

இலங்கையில் இசைத்துறையை வளர்த்த பிரபல சிங்கள பாடகர் அனில் பாரதி காலமானார்.

தமது 75 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகயீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (22) அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனில் பாரதி பாடிய பாடல்களில் பெரும்பாலானவை கிறிஸ்மஸ் பாடல்கள் என்பது விசேட அம்சமாகும்.

மொரட்டுவை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியில் பயின்ற அனில் பாரதி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றியதுடன், செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். அவர் வானொலியின் பணிப்பாளர் பதவியையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )