ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது
களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை பிரதேசத்தில் வைத்து 38 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த சந்தேகநபர்கள் இருவரினால் பயனபடுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் இருந்து திருடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றிவளைப்பில் இணைந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka