துப்பாக்கியால் சுடப்பட்ட தொலைத்த நிலையில் காட்டு யானை குட்டி மீட்பு

துப்பாக்கியால் சுடப்பட்ட தொலைத்த நிலையில் காட்டு யானை குட்டி மீட்பு

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் காட்டு யானை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில், யானை குட்டி ஒன்று வீழ்ந்து கிடப்பதாக, கிராமவாசிகள் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலையடுத்து, இந்த குட்டி யானை மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கந்தளாய் கால்நடை வைத்தியர் சமீர கலிங்கு ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று (23) காலை சம்பவ இடத்திற்குச் சென்று, குறித்த யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.

சுமார் 3 வயதுடைய பெண் யானைக் குட்டியின் வயிறு மற்றும் தொடை பகுதிகளில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளதால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், யானைக்குட்டி அதன் தாயிடமிருந்து பிரிந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )