100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நாராயணன் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட முதல் ராக்கெட் இது ஆகும்.

இந்த ராக்கெட் நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமாக தகவல்களை தெரிவிக்கும் இஸ்ரோவின் என்.வி.எஸ். 02 செயற்கைக்கோளை சுமந்து சென்றது.

இஸ்ரோவின் 100-வது ராக்கெட் மற்றும் 2025-ம் ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்திய முதல் ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோள் 2,250 கிலோ எடையும், 10 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது.

இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளடங்கியுள்ளன.

மேலும் 2025 ஆம் ஆண்டு இஸ்ரோவின் முதல் திட்டம் வெற்றி பெற்றதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரும் மேலும் தெரிவிக்கையில்,

“செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது 100-வது திட்டம் என்பதால் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி அனைத்து சிஸ்டம்களும் திட்டமிட்டப்படி இயங்கி வருகிறது,” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )