கப்பற்துறை தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

கப்பற்துறை தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள கப்பற்துறையில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காகப் பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சுழியோடிகள் மூலம் அவர் வெளியே எடுக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (31) காலை நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், உயிரிழந்த நபர் கப்பற்துறையில் உள்ள ஒரு துணை ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பதும், காலை உணவுக்குப் பிறகு கைகளைக் கழுவுவதற்காக கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காகப் பயன்படுத்தப்படும் தடாகத்திற்கு  சென்று திரும்பி வரும் வழியில் தடாகத்தில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)