மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு டக்ளஸ் இறுதி அஞ்சலி
மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
மாவை சேனாதிராசாவின் இல்லத்திற்கு நேற்று (01) சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.