கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
புத்தளம் , முந்தல் – நவன்டான்குளம் பகுதியில் ஒரு கிலோ 585 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் இலங்கை பெறுமதி 6 இலட்சத்திற்கும் அதிகமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் புத்தளம் – தம்பபண்ணி கடற்படையினர் மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து முந்தல் நவன்டான்குளம் பகுதியில் முன்னெடுத்த விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாப் பொதியை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொத்தாந்தீவு – பெரியபாடு பகுதியைச் சேர்ந்தவர் என கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.