அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால் மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க மாட்டார்
அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” உத்தியோகபூர்வ இல்லம் ராஜபக்சவுக்கு யஹபாலன அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது, மேலும் அவர் வெளியேறுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் முறையான அறிவிப்பின் மூலம் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க மாட்டார். இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளை வெளியிடுவது எந்தப் பயனும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.