ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு
ஷகிப் அல் ஹசனை கைது செய்ய பங்களாதேஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் தலைவருமான ஷகிப் அல் ஹசன்
மீது கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி காசோலை மோசடி வழக்கில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவரை நேற்று முன்தினம் 19 ஆம் திகதிக்குள் ஆஜராகும் படி டாக்கா நீதிமன்றம்
உத்தரவிட்டது. ஆனால் ஷகிப் அல் ஹசன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பின் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News