மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது

மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது

மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்றப் பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.

சுமார் 400 மில்லியன் ரூபாய் ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் இந்த மோசடிக்கு இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன.”என தெரித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )