
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான ஜனாதிபதியின் பயணம் குறித்த வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது