
9 ஆண்டுகளில் 3,400 யானைகள் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400 வரை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மருத்துவர் தம்மிக பட்டபெந்தி இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”அதன்படி, இன்றுவரை நாட்டில் இறந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 3,477 ஆகும். மேலும் காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளது.
நாட்டில் கடந்த 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400 வரை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்றுவரை நாட்டில் இறந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 3,477 ஆகும். மேலும் காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka