
இலங்கைக்கு USAID செலவிட்ட பணம் குறித்து டிரம்பின் வெளிப்படுத்தல்
USAID என்ற சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவரகம் குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இத்தகைய சூழலில், கடந்த சில ஆண்டுகளாக USAID நிதியளித்த திட்டங்கள் குறித்த அறிக்கையையும் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டது.
இதற்கிடையில், இலங்கை, பங்களாதேஷ், உக்ரைன், சிரியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளின் அரசாங்கங்களை மாற்ற இந்த அமைப்பு 260 மில்லியன் டொலரை செலவிட்டதாக பல இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அத்துடன் அமெரிக்க அரசு நிறுவனங்களில் நிதி மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட DOGE நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், பல்வேறு நாடுகளில் தேர்தல் பிரச்சாரங்களில் செல்வாக்கு செலுத்த USAID பணத்தை செலவிட்டதை நேற்று (11) வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், பாலின அடிப்படையிலான மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பட்டறைகளை நடத்தியதாகவும், இதற்கான செலவு 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் டிரம்ப் நிர்வாகம் வெளிப்படுத்தியிருந்தது.
அவர்கள் அதை ஒரு வினோதமான திட்டமாக அறிமுகப்படுத்தியிருந்தனர்.
இந்த சூழலில், பாலின-நடுநிலை சொற்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற ஒரு அற்ப விடயத்திற்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலரை செலவிட்டது கேள்விக்குறியாக இருப்பதால், பணம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரிக்க பாரளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று சபாநாயகருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.
இலங்கை மற்றும் பல நாடுகளில் அரசாங்கங்களை கவிழ்க்க USAID பணத்தைப் பயன்படுத்தியுள்ளது என்ற வெளிப்பாடு ஒரு பாரதூரமான நிலை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.