
எதிரணிகளை அச்சுறுத்தி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது
எதிரணிகள் மற்றும் அரச ஊழியர்களை அச்சுறுத்தி, ஒடுக்கி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர், ”ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியது. அதனை தற்போது நிறைவேற்ற முடியாதுள்ளதால் பாராளுமன்றத்தில் எதிரணியையும், வெளியில் அரசாங்க ஊழியர்களையும் ஒடுக்கி ஆட்சி நடத்த பார்க்கின்றது.
ஜனாதிபதி பொலிஸ் ஆணைக்குழுவை விமர்சித்திருந்தார். இந்நிலையில் 139 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 1990 காலப்பகுதியில் இருந்த அரசியலையே தற்போது நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
தமது அரசியல் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இவ்வறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.” என தெரிவித்துள்ளார்.