
மனுஷ நாணயக்காரவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தென்கொரிய விசா விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறபிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த மனுவில் ஏனைய பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, எதிர் மனுதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை ஜூன் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ள உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகியிருந்தார்.