விரைவில் கைதாவார் மனுஷ நாணயக்கார ?

விரைவில் கைதாவார் மனுஷ நாணயக்கார ?

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவர் பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்து தனிநபர்களிடமிருந்து 3 பில்லியன் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மோசடி செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவைவும் கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மனுஷ நாணயக்கார வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாடு திரும்பியவுடன் உடனடியாக அவரை கைதுசெய்ய பாதுகாப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )