இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட ‘ஹார்ட் இன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட ‘ஹார்ட் இன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘பேட்ட’, ‘மகான்’, ‘டிமான்டி காலனி 2’ , ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சனத் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட் இன்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹார்ட் இன் ‘ எனும் திரைப்படத்தில் சனத், மடோனா செபாஸ்டியன், புதுமுக நடிகை இமயா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்து வருகிறார்கள். முகேஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் கொமடி ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள படபிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )