
வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேசஅரசு கோரிக்கை விடுத்து இருந்தது.
எனினும் இது தொடர்பாக இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிளில் காணொளி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார்.
இந் நிலையில், வங்காளதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா உரையாற்றியதாவது:-
”நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன். போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன்.
முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது.” என தெரிவித்துள்ளார்.