
செல்பி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (20) காலை பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய நாட்டு பிரஜையான பெர்மினோவா ஒல்கா என்ற 51 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள அமுனுவெல்பிட்டிய பகுதியில் உள்ள சுரங்க பாதையை கடந்து ஒடும் ரயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த குறித்த பெண் ரயில் வீதி ஓரமாக இருந்த கற்களில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அதே ரயிலில் ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிலெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்