
காசல்ரி நீர்தேக்க பகுதியில் தீப்பரவல்
காசல்ரி நீர்தேக்க கரையோர வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
மலையகப் பகுதியில் அண்மைக்காலமாக கடும் வெப்பமான வானிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் விசமிகளினால் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் விசம செயலினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டமும் வெகுவாக குறைவடைந்துள்ளது.
நீர்மின் உற்பத்திக்கு அதிகளவான நீரை சேகரித்து வைத்திருக்கும் கேந்திர நிலையகமாக காணப்படும் காசல்ரி நீர்தேக்க கரையோரப்பகுதியிலும் காசல்ரி தோட்ட வனப்பகுதியிலும் நேற்று (23) விசமிகளினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக நீர்தேக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காசல்ரீ நீர்தேக்கம் மற்றும் மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka