இன்று ஜெனீவாவில் உரையாற்றும் விஜித ஹேரத்

இன்று ஜெனீவாவில் உரையாற்றும் விஜித ஹேரத்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். 

ஜெனீவா நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் அமைச்சர் பேரவையில் உரையாற்றவுள்ளார். 

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் பங்கேற்பதற்காக, அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

இந்தப் பயணத்தின் போது, அமைச்சர் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற இராஜாங்கச் செயலாளருடன் இருதரப்பு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். 

அதேபோல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், பாலஸ்தீன இராச்சியத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் வர்ஷன் அகபெகியன் மற்றும் பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

அத்துடன், சுவிட்சர்லாந்து மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)