“சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன்”
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது.
எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் , நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka