ஹஜ்ஜாஜிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கும் நடவடிக்கையில் சவூதி ! (நேரலை)
இவ்வருடத்திற்கான புனித ஹஜ் கிரியைகளுக்கான
பிரமாண்டமான ஏற்பாடுகளை சவூதி அரேபிய அரசாங்கம்
மேற்கொண்டுள்ளது.
இரு புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல சஊத்தின் ஆலோசனைக்கு அமைவாக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இம்முறை புனித ஹஜ் கடமையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை ஹஜ் கடமைகளின் போது 2 இலட்சத்து 50 ஆயிரம்
படைவீரர்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை விசேட போக்குவரத்து சேவைகளும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 35,000 சொகுசு பஸ்களும் சேவையில் ஈடு
படுத்தப்பட்டுள்ளன.
மேலும், புனிதஹஜ் கடமை நேரங்களின் போது கடமையாற்றவென ஒரு இலட்சத்து 20,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு தொண்டர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொறியியலாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 53,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் 264 முதலுதவி சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது,
மேலும் , 28 வைத்தியசாலைகளும், 203 நடமாடும் சிகிச்சை குழுக்களும் இயங்கி வருகின்றன.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு இம்முறை உலகலாவிய ரீதியில் 2,400 பேர் மன்னர் சல்மான் பின் அப்துல்
அஸீஸ் ஆல சஊத்தின் அழைப்பிற்கு அமைவாக விஷேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
காஸா தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற 1000 குடும்பங்களின் பிரதிநிதிகளுக்கு இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான விஷேட சந்தர்ப்பத்தை மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்
வழங்கியுள்ளார்.
இலங்கையிலிருந்து இம்முறை 3500 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ளனர்.
இதேவேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க முப்படையில் சேவையாற்றும் 05 பேருக்கும் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.