இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 32ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை உகாண்டா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் நியூசிலாந்து அணியை உகாண்டா அணி எதிர்கொண்டது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளமுடியாது 18.4 ஓவர்கள் நிறைவில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 40 ஓட்டங்களை பெற்றது.

உகாண்டா அணி சார்பில் அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா (Kenneth Waiswa) 11 ஓட்டங்களை பதிவு செய்தார்.

நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி (Tim Southee) மூன்று விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் (Trent Boult) மற்றும் மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

தொடர்ந்து 41 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய
நியூசிலாந்து அணி 5.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை கடந்தது

நியூசிலாந்து அணி சார்பில் டெவோன் கான்வே 22 ஓட்டங்களை பதிவு செய்தார்.

பந்து வீச்சில் உகாண்டா அணி சார்பில் ரியாசத் அலி ஷா ஒரு விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )