இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இந்தியா அணி வெற்றி!
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய இந்தியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பில் , சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 53 ஓட்டங்களையும் ஹர்டிக் பாண்டியா (Hardik Pandya) 32 ஓட்டங்களையும் விராட் கோலி (Virat Kohli) 24 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் (Rashid Khan) மற்றும் ஃபசல்ஹக் ஃபாரூக்கி (Fazalhaq Farooqi) ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து , 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் (Azmatullah Omarzai) 26 ஓட்டங்களையும் நஜிபுல்லா சத்ரன் (Najibullah Zadran ) 19 ஓட்டங்களையும் குல்பாடின் நைப் (Gulbadin Naib) 17 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
இந்தியா அணி சார்பில் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah)
மற்றும் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.