முகமது ஷமி – சானியா மிர்சா திருமணம் ? 

முகமது ஷமி – சானியா மிர்சா திருமணம் ? 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வலம் வருகின்றன.

அது குறித்த ஒரு புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அதேபோல கடந்த சில மாதங்கள் முன்பு சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார்.

விவாகரத்தை தொடர்ந்து சோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

அப்போதே முகமது ஷமி, சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்வார் என வதந்திகள் பரப்பப்பட்டன.

இந்த நிலையில் தற்போது சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

இருப்பினும் குறித்த புகைப்படம் சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்துள்ளது

அந்த புகைப்படத்தில் சோயப் மாலிக்கின் முகத்தை எடுத்து விட்டு, ஷமியின் முகத்தை மாற்றி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது. சானியா மிர்சா இது வரை முகமது ஷமியை நேரில் பார்த்ததே இல்லை என சானியா மிர்சாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

தற்போது சானியா மிர்சா மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றுள்ளார்.

அவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )