வரலாறு காணாத வெப்பம் ; உருகிய ஆப்ரகாம் லிங்கன் சிலை

வரலாறு காணாத வெப்பம் ; உருகிய ஆப்ரகாம் லிங்கன் சிலை

பல நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவிலும் வெப்ப அலை தொடர்கிறது. வெப்ப அலையின் தாக்கம் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது மெழுகால் செய்யப்பட்ட சிலைகளிலும் காணப்படுகிறது.

அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )