பொதுப் போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் !

பொதுப் போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் !

பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்காக வீதிகள், பாலங்கள் மற்றும் தொடருந்து வீதிகள், தொடருந்துகள் போன்றவற்றின் மூலம் போக்குவரத்துச் சேவைகளை இலகுபடுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய வர்த்தமானி அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )