மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம்
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்கவினால் நேற்று (04) வெளியிடப்பட்டது.
எனவே, இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம், எந்தவொரு அரசாங்க நிறுவனமோ, திணைக்களமோ, உள்ளூராட்சி மன்றமோ, கூட்டுறவுச் சங்கமோ அல்லது அவற்றின் கிளையோ வழங்கும் சேவைகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகளாக மாறியுள்ளன.