இரசாயன கழிவுகளை அகற்ற 05 மில்லியன் டொலர் நிதியுதவி !

இரசாயன கழிவுகளை அகற்ற 05 மில்லியன் டொலர் நிதியுதவி !

இலங்கையில் இரசாயன கழிவுகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சுக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்திற்கும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலகளாவிய சுற்றாடல் வசதிகள் நிதியம் வழங்கியுள்ளது.

தொடர்ச்சியான இயற்கை மாசுப்படுத்திகள் அல்லது பாதரசம் கொண்ட பொருட்களை இலங்கை உற்பத்தி செய்வதில்லை என்ற போதிலும் இந்த வகையான உள்ளீடுகளைக் கொண்ட பல பொருட்கள், ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு பயன்பாடுகளுக்காக, நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் திறன் இல்லாமையால் இரசாயன இறக்குமதிகள் தொடர்ந்தும் தவறாக நிர்வகிக்கப்படுவதாக இலங்கை யில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )