சுவையான பொட்டுக்கடலை சட்னி தயாரிப்பது எப்படி !

சுவையான பொட்டுக்கடலை சட்னி தயாரிப்பது எப்படி !

சுவையான பொட்டுக்கடலை சட்னி விரைவாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. பொருள் – அளவு
  2. பொட்டுக்கடலை அரை கப்
  3. தேங்காய் துருவல்1 கப்
  4. சின்ன வெங்காயம் 4
  5. பச்சை மிளகாய்3
  6. இஞ்சி விழுது1 டீஸ்பூன்
  7. பூண்டு பல் 5
  8. உப்பு தேவைக்கேற்ப

தாளித்தல்

  1. எண்ணெய் – தேவைக்கேற்ப
  2. கடுகு – ஒரு டீஸ்பூன்
  3. சீரகம் – அரை டீஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும்.

சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )