அர்ஜென்டினா வீரர்களின் இனவெறி பாடல் : விசாரணையை ஆரம்பித்தது பிபா !

அர்ஜென்டினா வீரர்களின் இனவெறி பாடல் : விசாரணையை ஆரம்பித்தது பிபா !

அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்கா (Copa América) வெற்றியைக் கொண்டாடும் வகையில், பிரான்ஸ் வீரர்களைப் பற்றி பாடிய பாடல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா (Copa América) கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை அர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியை தொடர்ந்து அர்ஜென்டீனா அணி வீரர்கள்
‘இனவெறி மற்றும் பாரபட்சமான’ பாடல் ஒன்றை பாடும் அர்ஜென்டீனா அணி மிட்ஃபீல்டர் என்ஸோ பெர்னாண்டஸா நேரலையாக சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

குறித்த ஒளிபரப்பில், ​​அர்ஜென்டினா வீரர்கள் பாடிய பாடலின் முதல் இரண்டு வரிகளைப் கேட்க முடிந்தது,

‘on passport, French nationality, listen, spread the word, they play in France, but they are all…’, என பாடியுள்ளனர்.

குறித்த பாடலானது ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு வீரர்களுக்கு எதிரான இனவெறி துஷ்பிரயோக பாடலாக கருதப்படுகின்றது.

இந்த காணொளிக்கு பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் உட்பட பல அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன.

அர்ஜென்டினா வீரர்களில் இந்த செயற்பாடு குறித்து பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு (French Football Federation) பிபாவிடம் (FIFA) சட்டப்பூர்வ புகாரை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இது தொடர்பில் பிபா (FIFA) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிலிப் டயல்லோ (Philippe Diallo) வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி மற்றும் பாரபட்சமான கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாடலை சமூக ஊடகத்தின் மூலம் நேரலையாக பகிர்ந்ததற்காக அர்ஜென்டீனா அணி மிட்ஃபீல்டர் என்ஸோ பெர்னாண்டஸா தவறை ஒப்புக்கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளமை குறிப்புடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )