ஸ்ரீ தலதா மாளிகையின் கும்பல் பெரஹரா எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பம் !
கண்டி ஸ்ரீ தலதாமாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் எசல பெரஹரா வைபவங்கள் நேற்று ஆரம்பமாகின.
கப் நடுதல் என்ற சம்பிரதாயத்தையடுத்து பெரஹரா உள் வீதியில் வலம்வருதல் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாத்த தேவாலயம், விஷ்ணு தேவாலயம், கதிர்காம தேவாலயம், பத்தினி தேவாலயம் ஆகிய நான்கு தேவாலயங்களின் ஏற்பாட்டில் கப் நடுதல் அதிகாலை 4.10 மணிக்கான சுப நேரத்தில் ஆரம்பமாகியது.
கப் நடுதலை அடுத்து 5 தினங்களுக்கு உற் பெரஹரா உள்புற வீதியில் வலம் வரும்.
அதனையடுத்து முதலாவது கும்பல் பெரஹரா எதிர்வரும் 10ஆம் திகதி வெளிவீதி உலாவரும் , இது ஐந்து நாட்களுக்கு நடைபெறும்.
அதனையடுத்து ஐந்து தினங்களுக்கு முக்கிய பெரஹராவாகக் கரு
தப்படும் ரந்தோலி பெரஹரா ஊர்வலங்கள் நடைபெறும்.
TAGS Esala PeraheraHot NewskandyKap SituweemaKataragamaKumbal PeraheraNathaPaththiniSatara Maha DewalayasSri lankaVishnu