தேர்தல் ஆணையத்தின் இணையதளம் போன்று மற்றொரு இணையதளம் – விசாரணைகள் ஆரம்பம் !

தேர்தல் ஆணையத்தின் இணையதளம் போன்று மற்றொரு இணையதளம் – விசாரணைகள் ஆரம்பம் !

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (09) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த கால அவகாசம் எதிர்வரும் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த போதிலும், தபால் மூலம் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )