நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது இரத்து

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது இரத்து

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்கிற ஜானி பாஷாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் தேசிய விருது பெறுவதற்காக பிணை கோரிய ஜானிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. 

போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருதும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)