
பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கு எதிராக பெண்கள் செம்மஞ்சல் நிற ஆடைகளில் பாராளுமன்றுக்கு வருகை
பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான (GBV) பதினாறு நாள் உலகலாவிய முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் செம்மஞ்சல் நிற ஆடைகளை அணிந்திருந்தனர். இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அம்பிகா சாமுவேல் செம்மஞ்சல் நிற கைப்பட்டியை அணிவித்தார்.