வெடிகுண்டு மிரட்டல் ; 44 பாடசாலைகளுக்கு விடுமுறை

வெடிகுண்டு மிரட்டல் ; 44 பாடசாலைகளுக்கு விடுமுறை

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் 40 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தெரிவிக்கிப்படுகிறது.

இதனால், இந்திய பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இன்று காலை பாடசாலைக்கு வந்த சிறுவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்து சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் பொலிஸ் நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)