
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க தடை
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் என்றும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.