
இது வரை வீதி விபத்துகளில் 2243 பேர் உயிரிழப்பு
நடப்பாண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 13, 2024 வரை வீதி விபத்துகளில் 2243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், மொத்தம் 22,967 வீதி விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 2141 மரண விபத்துக்கள் அடங்கும், இது அனைத்து சம்பவங்களில் 9% ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6500 கடுமையான விபத்துகளும் 9127 சிறு விபத்துகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டன், மாலியப்பு பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர், இதில் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுகன்னாவையில் பஸ் ஒன்று மரத்தில் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் விபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.